Honorary President

Honorary President

http://allindiajangam.com/images/general-images/VPS_web.jpg

கடவுள் எப்படிப்பட்டவன்?

 
ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பான். 
மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பான். அவன் தான் கடவுள்.
 
பூலோகத்தில் வாழும்போது  புகழையும் கொடுப்பான்.
பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பான். அவன் தான் கடவுள்
 
பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பான்.
அங்கே தேனை வைத்ததை தேனீக்கும் சொல்வான்.
பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வான். அவன் தான் கடவுள்
 
கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கும் வைப்பான். 
அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பான். அவன் தான் கடவுள்!
 
ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை (மானுக்குக்) கொடுப்பான்.
பின்னர் அந்த மானை பிடிக்கின்ற சக்தியை புலிக்கும் கொடுப்பான். அவன்தான் கடவுள்!
 
அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவையும் கொடுப்பான்.
அதை முழுதும் பயன்படுத்தாத மனிதர்களையும் படைப்பான். அவன் தான் கடவுள்!
 
தவம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பான். 
அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பான். அவன்தான் கடவுள்!
 
நாட்டை ஆள விட்டு அழகும் பார்ப்பான். 
அவனே கொள்ளையடித்தால் கொடுத்தவனே பிடுங்கவும் செய்வான். அவன் தான் கடவுள்-!
 
புரியாதவனுக்கு புதிராய் இருப்பான். 
தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பான். அவன் தான் கடவுள்!
 
கடல் முழுதும் தண்ணீரை வைப்பான். 
தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பான் அவன் தான் கடவுள்!
 
மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும். 
சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான். பின்னிருந்து இயக்குவான். அவன் தான் கடவுள்!
 
தன்னை வெளியே தேடினால் விளையாட்டுக் காட்டுவான்.
(உள்ளத்தின்) உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான். அவன் தான் கடவுள்!
 
- கவியரசன் கண்ணதாசன் சொன்னது.
 
- வி.பி.சுவாமி

All India Jangam Welfare Associations

அகில இந்திய ஜங்கம் முன்னேற்ற சங்கம் 2012 ம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 19 தேதியன்று சென்னையில் துவக்கப்பட்டது.

Read More

Jangam Messages

ஜங்கம் மலரில் மங்கல மாலை பகுதியில்

விளம்பரம் செய்து பயன் பெறுமாறு அன்புடன்

வேண்டுகிறோம்.

மங்கல மாலை விளம்பரக் கட்டணங்கள் விவரம்

 

1. கலர் விளம்பரம்                                             1 மாதம்    ரூ 2,500

2. முழுப் பக்கம் ஜாதகக் கட்டங்களுடன்  4 மாதம்   ரூ. 2,500

3. அரைப் பக்கம் ஜாதகக் கட்டங்களுடன் 4 மாதம்   ரூ., 1,500

4. வரி விளம்பரங்கள்-                                      4 மாதம்   ரூ.300

 ஜங்கம் மலர் சந்தா விரங்கள்

1. ஜங்கம் மலர் புரவலர் திட்டம்                    ரூ. 5,000/-

2. 5  ஆண்டு சந்தா                                                ரூ. 1,000/-

  வணிக விளம்பரங்களை வரவேற்கிறோம்.....                              

Read More

Jangam Welfare Daily Updates

ஏப்ரல் 2024 மாதக் கூட்ட அறிவிப்பு

நமது சங்கத்தின் ஏப்ரல் 2024 மாதக் கூட்டம் வரும் 21.04.2024 ஞாயிறு காலை 10.30 மணியளவில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அடுத்துள்ள அரும்பாக்கம் தியாகி அஞ்சலையம்மாள் சமூக நலக்கூடம், (வல்லவன் ஓட்டல் எதிரில்) எண்.41, விநாயகபுரம் முதல் தெரு, அரும்பாக்கம், சென்னை - 106ல் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

வேலு கருணாநிதி, பொதுச் செயலாளர்



 

Read More
People love Jangam

Feedback From Our Customers