Honorary Advisor Admin

Honorary Advisor Admin

http://allindiajangam.com/images/general-images/krishnamurthycopy.jpg

சைவ, வீரசைவ ஆதீனங்கள் மடங்கள்

 
 
திருவாவடுதுறையின் தலமரம் அரசு. இந்த அரசமரமானது அருகிலுள்ள மண்டபத்தின் மேலும், எதிர்சுவரின் மேலும் படர்ந்துள்ளதை இன்றும் காணலாம். கிளைகள் விரிந்து படர்ந்திருப்பதால் படர் அரசு என்று பெயர் பெற்றது. இங்குள்ள நந்தி பெரியது. இதற்கு பெயர் தருமநந்தி என்பதாகும். திருவாவடுதுறைக்கு அரசவனம் எனவும் பெயர் விளங்கும். அரசவைத்து அறநிலையம் என போற்றப்படும் திருவாவடுதுறையில் அரசம்பலம், போதியம்பலம் என விளங்கும் அம்பலம் உண்டு. இவ்வாறு போற்றப்படும் திருவாவடுதுறையில் அரசம்பலமாகிய திருக்கோயிலில் படரரசின் கீழே தவக்கோலம் பூண்டார் திருமூலர். இந்த ஊரின் பெயர் சாத்தனூர் என்பதும் திருவாவடுதுறை கோயிலின் பெயராகவும் விளங்கிய நிலையில், தற்போது இத்தலம் திருவாவடுதுறை என்றே அழைக்கப்படுகிறது. திருமூலர் தவமிருந்து ஞானம் பெற்ற மேலைத் திருக்காற்றில் இப்போது திருமூலர் குகை என்றழைக்கப்படுகிறது. திருமூலர் & திருமந்திரத்தை அருளிய இடம் திருவாவடுதுறை ஆலயத்தின் & படர் அரச மரத்தடியும், மேற்கு பிரகாரத்தில் உள்ள திருமூலர் சன்னதி குகையும் எனப்படுகிறது.
திருமூலரைப் போன்றே திருமாளிகைத் தேவரும் கைது சித்தார்தியாவார். திருவிசைப்பாவைப் பாடிய திருமாளிகைத் தேவர் போகர் சித்தரின் மாணவராவார். திருமாளிகைத் தேவர் சிறந்த சிவயோகியாவார். இவர் மிக வசீகரமான அழகிய தோற்றம் கொண்டவர். இவரது அழகிய திருமேனி அழகில் மயங்கிய மகளிர் சிலர் இவரைப் போன்ற தோற்றம் கொண்ட பிள்ளைகளை பெற்றனராம். அம்மகளிரின் கற்பில் ஏற்பட்ட ஐயம் காரணமாக அரசன் நலங்கன் வரை செய்தி போனதால் அரசன் தேவரை விசாரணைக்கு அழைத்தானாம்.
இவர் அரசன் அழைப்பை ஏற்க மறுத்து நாமார்க்கும் குடியல்லோம் என்றிருக்கும் நிலையில், இவரை வலிந்து கொண்டுவர படை வீரர்களை அரசன் அனுப்பியுள்ளான். படை வீரர்கள் தம்மை அழைத்துச் செல்ல வருவதைக் கண்ட தேவர், மதில் மேலிருந்த நந்திகளையெல்லாம் உயிர் பெற்றெழச் செய்து படை வீரர்கள் மீது ஏவினார். இதற்கு சான்றாக இப்போதும் ஆலய மதில்கள் மேல் நந்தி உருவங்கள் இல்லை என்பதை காணலாம். திருமாளிகைத் தேவர் திருவாவடுதுறையில் தாம் தவம் செய்த இடத்திலேயே முக்தி பெற்றார். அவரது சமாதிக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குள் உள்ளது.
திருவாவடுதுறை ஆதீனத்திற்குள் ஆதீன நிறுவனரும் குழு முதல்வருமான நமச்சிவாய மூர்த்திகளின் சமாதிக் கோயிலும் திருமாளிகைத் தேவரின் சமாதிக் கோயிலும் அடுத்தடுத்து உள்ளன. திருமாளிகைத் தேவரின் மாளிகை மடம் இருந்த இடத்தில் அவரது சமாதியையொட்டியே திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது.
திருவாவடுதுறை ஆதீனமும், கோயிலும் அடுத்தடுத்து ஒன்றை ஒன்று ஒட்டினாற்போல் உள்ளன. இரண்டிற்கும் இடையே வாயிலும் உண்டு. கோயிலில் கோமுத்தீஸ்வரருக்கு வழிபாடு நடந்த உடனே ஆதீனத்தில் உள்ள திருமாளிகைத் தேவர் சன்னதியில் வழிபாடு நடக்கும். கோயில் பூசை செய்யும் சிவாச்சாரியாரே ஆதீனத்திற்கு சென்று திருமாளிகைத் தேவர் சன்னதியிலும் ஆராதனை செய்வார். அதன் பின்னரே நமச்சிவாயமூர்த்திகளுக்கு வழிபாடு நடைபெறும். பின்னர் மாகேஸ்வர பூசை சிறப்புற நடைபெறும்.         
 
...நெமிலி கிருஷ்ணமூர்த்தி

 

All India Jangam Welfare Associations

அகில இந்திய ஜங்கம் முன்னேற்ற சங்கம் 2012 ம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 19 தேதியன்று சென்னையில் துவக்கப்பட்டது.

Read More

Jangam Messages

ஜங்கம் மலரில் மங்கல மாலை பகுதியில்

விளம்பரம் செய்து பயன் பெறுமாறு அன்புடன்

வேண்டுகிறோம்.

மங்கல மாலை விளம்பரக் கட்டணங்கள் விவரம்

 

1. கலர் விளம்பரம்                                             1 மாதம்    ரூ 2,500

2. முழுப் பக்கம் ஜாதகக் கட்டங்களுடன்  4 மாதம்   ரூ. 2,500

3. அரைப் பக்கம் ஜாதகக் கட்டங்களுடன் 4 மாதம்   ரூ., 1,500

4. வரி விளம்பரங்கள்-                                      4 மாதம்   ரூ.300

 ஜங்கம் மலர் சந்தா விரங்கள்

1. ஜங்கம் மலர் புரவலர் திட்டம்                    ரூ. 5,000/-

2. 5  ஆண்டு சந்தா                                                ரூ. 1,000/-

  வணிக விளம்பரங்களை வரவேற்கிறோம்.....                              

Read More

Jangam Welfare Daily Updates

ஏப்ரல் 2024 மாதக் கூட்ட அறிவிப்பு

நமது சங்கத்தின் ஏப்ரல் 2024 மாதக் கூட்டம் வரும் 21.04.2024 ஞாயிறு காலை 10.30 மணியளவில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அடுத்துள்ள அரும்பாக்கம் தியாகி அஞ்சலையம்மாள் சமூக நலக்கூடம், (வல்லவன் ஓட்டல் எதிரில்) எண்.41, விநாயகபுரம் முதல் தெரு, அரும்பாக்கம், சென்னை - 106ல் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

வேலு கருணாநிதி, பொதுச் செயலாளர்



 

Read More
People love Jangam

Feedback From Our Customers