Executive President

Executive President

http://allindiajangam.com/images/general-images/kanagasababathy_web1.jpg

சாதனைப் பயணம் தொடர்கிறது...!

அனைத்து நம் சமுதாய உறவு பெருமக்களுக்கும் வணக்கம்.
 
ஒட்டுமொத்த நம் ஜங்கம் சமுதாய மக்களின் உணர்வு பிழம்பாய் வளர்ந்து வருகின்றது நமது அகில இந்திய ஜங்கம் முன்னேற்ற சங்கம். இதுவரை 19 மாவட்டங்களில் கிளை பரப்பி அசைக்க முடியாத ஆலமரமாய் வளர்ந்து சமுதாயப் பணியாற்றி வருகின்றது நமது சங்கம் என்றால் மிகையல்ல. அனைத்து நம் ஜங்கம் சமுதாய மக்களையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து, நமது ஒற்றுமையின் பலத்தை உலகிற்குப் பறைசாற்றி, அதன் மூலம் நமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்திட அரும்பாடு பட்டு வருகின்றது நமது அகில இந்திய ஜங்கம் முன்னேற்ற சங்கம். சமுதாய முன்னேற்றமே நமது ஒற்றைக் குறிக்கோள். அந்த வகையில், இளைய சமுதாயமாம் நம் இன மாணவச் செல்வங்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பினை உறுதி செய்திடும் எம்பிசி மற்றும் ஓபிசி போன்ற விஷயங்களில் நமது சங்கம் முனைப்புடன் பணியாற்றி வருவதை அனைவரும் அறிவீர்கள். நலிந்த நம் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதிலும் நமது சங்கமே முன்னணியில் உள்ளது என்பதையும், நம் ஜங்கம் சமுதாய மக்களின் தகவல் தொடர்பு பாலமாக தொடர்ந்து வெளியிடப்பட்டு வரும் நமது சமுதாயத்திற்கான ஒரே பத்திரிக்கையான ஜங்கம் மலரை சங்கம் துவக்கிய மூன்றாவது மாதத்தில் இருந்து வெளியிட்டு வருவதும் நமது அகில இந்திய ஜங்கம் முன்னேற்ற சங்கமே.
 
விரைவில் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் நம் இன மக்கள் அனைவரும் நமது சங்கத்தில் உறுப்பினராக இணைந்து மேலும் வலுவான இயக்கமாக நமது சங்கத்தை வளர்த்திட வேண்டும் என அன்புடன் அழைக்கின்றோம். 
மேலும் ஆங்காங்கே பகுதிவாரியாக ஜங்கம் என்ற பெயரில்  செயல்பட்டு வரும் சங்கங்களும் நமது சங்கத்தில் இணைந்து செயல்பட்டால் நமது இன பலத்தை வெளி உலகத்திற்கு காட்டிட ஏதுவாக அமையும். உண்மையான இனப்பற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் இது பற்றி ஆலோசிக்க வேண்டும்.
 
...மிக்க அன்புடன் எஸ்.கனகசபாபதி

All India Jangam Welfare Associations

அகில இந்திய ஜங்கம் முன்னேற்ற சங்கம் 2012 ம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 19 தேதியன்று சென்னையில் துவக்கப்பட்டது.

Read More

Jangam Messages

ஜங்கம் மலரில் மங்கல மாலை பகுதியில்

விளம்பரம் செய்து பயன் பெறுமாறு அன்புடன்

வேண்டுகிறோம்.

மங்கல மாலை விளம்பரக் கட்டணங்கள் விவரம்

 

1. கலர் விளம்பரம்                                             1 மாதம்    ரூ 2,500

2. முழுப் பக்கம் ஜாதகக் கட்டங்களுடன்  4 மாதம்   ரூ. 2,500

3. அரைப் பக்கம் ஜாதகக் கட்டங்களுடன் 4 மாதம்   ரூ., 1,500

4. வரி விளம்பரங்கள்-                                      4 மாதம்   ரூ.300

 ஜங்கம் மலர் சந்தா விரங்கள்

1. ஜங்கம் மலர் புரவலர் திட்டம்                    ரூ. 5,000/-

2. 5  ஆண்டு சந்தா                                                ரூ. 1,000/-

  வணிக விளம்பரங்களை வரவேற்கிறோம்.....                              

Read More

Jangam Welfare Daily Updates

ஏப்ரல் 2024 மாதக் கூட்ட அறிவிப்பு

நமது சங்கத்தின் ஏப்ரல் 2024 மாதக் கூட்டம் வரும் 21.04.2024 ஞாயிறு காலை 10.30 மணியளவில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அடுத்துள்ள அரும்பாக்கம் தியாகி அஞ்சலையம்மாள் சமூக நலக்கூடம், (வல்லவன் ஓட்டல் எதிரில்) எண்.41, விநாயகபுரம் முதல் தெரு, அரும்பாக்கம், சென்னை - 106ல் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

வேலு கருணாநிதி, பொதுச் செயலாளர்



 

Read More
People love Jangam

Feedback From Our Customers